என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடி தாக்கியதில் கோழிப்பண்ணையில் தீ விபத்து
    X

    கோழி பண்ணையில் தீ விபத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கருகி இறந்தன.

    இடி தாக்கியதில் கோழிப்பண்ணையில் தீ விபத்து

    • திருப்பதி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையின் மீது இடி மின்னல் தாக்கியது.
    • பந்தல் தீ பிடித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி மற்றும் குஞ்சுகள் கருகின.

    அரூர்,

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்றும் மாலை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

    அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    இந்த நிலையில் கோட்டப்பட்டி அருகே உள்ள மலைதாங்கி கிராமத்தில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையின் மீது இடி மின்னல் தாக்கியது. இதில் பந்தல் தீ பிடித்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி மற்றும் குஞ்சுகள் கருகின.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×