என் மலர்
உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் கரடி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்
- தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி இவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.
- சபிதா வை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
வால்பாறை,
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சபிதா(வயது25). இவர் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் தங்கி இருந்து தேயிலை தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இன்று அதிகாலை 5.50 மணிக்கு வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி இவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.
இதனால் சபிதா கூச்சலிட்டுள்ளார். இவரின் கூச்சல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.
ஆட்கள் வருவதை பார்த்ததும் கரடி, அங்கிருந்து வனத்திற்குள் ெசன்று விட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சபிதா வை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சை க்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே பெ ண்ணை கரடி தாக்கிய தகவல் அறிந்ததும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் ஆஸ்பத்திரிக்கு வந்து சம்பவம் குறித்து கேட்டறிந்து முதல் நிவாரண தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்கினர்.
தொடர்ந்து இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.