search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழையால் நெற்பயிர்களை நிமிர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி
    X

    நெற்பயிர்களை நிமிர்த்தி கட்டும் பணியில் பெண் விவசாயி.

    கனமழையால் நெற்பயிர்களை நிமிர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி

    • அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை.
    • வேருடன் பயிர் சாய்ந்ததால் கட்டினாலும் மீண்டும் சாய்ந்து அழுகக்கூடிய நிலை ஏற்படும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம் திருவை யாறு, அந்தணர்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்தது . தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து சாய்ந்த நெற்பயிர்களை தூக்கி நிமிர்த்தி கட்டி காப்பாற்றும் பணியில் விவசாயிகள் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருந்த போதிலும் வேருடன் பயிர் சாய்ந்ததால் கட்டினாலும் பிரயோஜனப்படாமல் மீண்டும் சாய்ந்து அழுகக்கூடிய நிலை ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    எனவே துறை அதிகாரிகள் பாதிப்படைந்த பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய நிவாரண தொகை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×