search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூரில் இடிந்து விழும் நிலையில் காணப்படும் ரேஷன்கடை
    X

    அன்னூரில் இடிந்து விழும் நிலையில் காணப்படும் ரேஷன்கடை

    • கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • ரேஷன் கடையை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    அன்னூர் வட்டத்தில், அன்னூர்-மேட்டுப்பா ளையம் ஊராட்சி உள்ளது. கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே நியாய விலைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நியாயவிலைக்கடையின் கீழ் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் வழங்கக்கூடிய மலிவு விலை பொருட்கள் (அரிசி, பருப்பு, சக்கரை) பொங்கல் பரிசு, சமையல் எரிவாயு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.இந்த கடைக்கு மாதந்தோறும் கிராமத்தைச் சுற்றி உள்ள மக்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    மக்கள் அதிகமாக வந்து செல்லும், நியாய விலைக்கடையில், அதன் மேல் சுவர்கள் விரிசல் விட்ட வண்ணம் உள்ளது. தற்சமயம் பெய்து வரும் பருவ மழையின் காரணமாக சேதாரம் இன்னும் அதிகமாகும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

    மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் பட்சத்தில், மழைக்காலங்களில் ஏதேனும் நீர்க்கசிவு அல்லது மேற்கூரை இடிந்து விழுந்தால் பெரும் அசம்பாவதங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

    மேலும் அங்கு இருக்கும் பொருட்களும் சேதமாகி, அத்தியாசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்று பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இதனை சீர் செய்து தருமாறு ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் ஊரா ட்சியில் வேலை விஷயமாக வரும் பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளை எடுத்து கூறுவதற்கு இந்த கட்டிடத்தின் வழியாக தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே இங்கு இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடையை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×