என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காட்சி.
பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து விபத்து
- எர்ரம்பட்டி பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- இதில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்து சிப்காட் வளாகத்தில் தனியார் மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஒப்பந்த ஊழியர்களை ஏற்றி வந்த டெம்போ டிராவல்ஸ் வாகனமானது இன்று அதிகாலை ஓட்டுனர் உட்பட 10 பேருடன் போச்சம்பள்ளி அடுத்து எர்ரம்பட்டி பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த 9 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த அந்த நிறுவன ஊழியர்கள் இவர்களை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பச்சூர் பகுதியைச் சேர்ந்த குறிஞ்சி (22) மற்றும் திருப்பத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மலர் (20), நாட்றம்பள்ளி பகுதியைச் சார்ந்த நந்தினி(22), மல்லப்பள்ளி பகுதியைச் சார்ந்த தமிழரசி(23) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






