என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
- மரிய ஜான்சன் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
- 2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள வேடப்பட்டி ராஜன் நகரை சேர்ந்தவர் மரிய ஜான்சன் (வயது 42). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மூத்த மகன் ஜார்ஜ் டேனியல் (13), இளைய மகன் கார்ரெல் (11), அண்ணன் மகன் ராட்சன் (11) ஆகியோருடன் புதுக்குளத்தில் உள்ள குட்டையில் குளிக்க சென்றார். அப்போது மரிய ஜான்சனின் இளைய மகன் கார்ரெல் குட்டைக்குள் தவறி விழுந்தார். இதனை பார்த்த அவரது மூத்த மகன் டேனியல் ஜார்ஜ் நீரில் தத்தளித்த தனது தம்பியை காப்பாற்றுவதற்காக குட்டைக்குள் குதித்தார். அவர்கள் 2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மரிய ஜான்சன் குட்டைக்குள் குதித்து உயிருக்கு போராடிய மகன்கள் 2 பேரையும் மீட்டார்.பின்னர் மயங்கிய நிலையில் இருந்த 2 பேரையும் வேடப்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு 2 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ஜார்ஜ் டேனி யலை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.கார்ரெல்லுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகி றார்கள். இது குறித்து தொண்டா முத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






