search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    30 வயது வாலிபருக்கு கொரோனாவிமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்
    X

    30 வயது வாலிபருக்கு கொரோனாவிமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்

    • ஷார்ஜாவில் இருந்து கோவை வந்தார்.
    • 141 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

    கோவை,

    நாடு முழுவதும் புதியவகை கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளி நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு சூழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இது குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவருடன் பயணித்த சக பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: -

    அரசு வழிகாட்டுதலின் படி கோவை விமான நிலையத்துக்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ரேண்டம் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்னு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இந்தநிலையில் சார்ஜாவில் இருந்து கோவை வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது குறித்து நாமக்கல் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவைக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் தற்போது வரை வந்த மொத்தம் 4,230 பயணிகள் கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் 141 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதல் 2 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×