என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது
    X

    சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

    • சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து.
    • மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    உத்தனப்பள்ளி போலீசார் ரோந்து சென்றபோது சீபம் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 50), கணிஞ்சூரை சேர்ந்த திலீப் (24), சாமனபள்ளியை சேர்ந்த சமீர் யாதவ் (36) ஆகியோர் பணம் வைத்து சூதாடியபோது கைது செய்யப்பட்டனர்.

    கெலமங்கலம் போலீசார் நடத்திய வேட்டையில் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் (48), ஸ்ரீதர் (36), சந்திரசேகர் (38), ஆகியோர் பணம் வைத்து சூதாடி சிக்கினர்.

    பாகலூர் பகுதியில் சிவா (32), வேலு (40), கிருஷ்ணமூர்த்தி (40) ஆகியோர் பணம் வைத்து சூதாடியபோது கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×