திருவல்லிக்கேணி காமகலா காமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.7.5கோடி நிலம் மீட்பு

காலிமனை மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.கோவில் செயல் அலுவலர் கங்காதேவி ஆகியோர் இந்த மீட்புப் பணியின் போது உடனிருந்தனர்.
திருவல்லிக்கேணி காமகலா காமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.7.5கோடி நிலம் மீட்பு
Published on

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை, திருவல்லிக்கேணி காமகலா காமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ரூ.7.5 கோடி மதிப்பிலான காலிமனை மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி, ராஜா அனுமந்த தெருவில் 5305 சதுரடி பரப்பளவு கொண்ட காலிமனையானது. காமகலா காமேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னை மண்டலம் இணை ஆணையரின் அறிவுரைகளின் படி, உதவி ஆணையர் கி.பாரதிராஜா முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் காலிமனை மீட்கப்பட்டு, கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

மயிலாப்பூர் சரக ஆய்வர் மணி, சிறப்பு பணி செயல் அலுவலர்கள் குமரேசன், தேன்மொழி, ரமேஷ், நித்யானந்தம், கோபி மற்றும் கோவில் செயல் அலுவலர் கங்காதேவி ஆகியோர் இந்த மீட்புப் பணியின் போது உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com