search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிடரை எதிர்கொள்ள கடலோரத்தில் 7 முகாம்கள்- நெல்லை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை - கலெக்டர் விஷ்ணு தகவல்
    X

    பேரிடரை எதிர்கொள்ள கடலோரத்தில் 7 முகாம்கள்- நெல்லை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை - கலெக்டர் விஷ்ணு தகவல்

    • கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
    • நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் சோதனை, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் மருந்துகளும் வழங்கப்பட்டது. அப்போது கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு பரிசோதித்துக் கொள்ளலாம். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை எலிக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனாலும் நெல்லை மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என மாவட்ட முழுவதும் சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நமது மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை ஏதும் இதுவரை இல்லை. ஆனாலும் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் தொடர்ந்து தூர்வாரப்பட்டு வருகிறது.

    பருவமழை பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 7 சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக சோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப் போவதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×