என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேளாண் விற்பனை கடைக்காரரிடம் ரூ.6.26 லட்சம் மோசடி
- அவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் எடுத்துவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.
- இது குறித்து அம்ரிஷ் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த முதுகானப்பள்ளியைச் சேர்ந்தவர் அம்ரிஷ் (வயது 43).
வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த மாதம் 24-ந் தேதி தொடர்பு கொண்ட ஒருவர் தான் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி பேசியுள்ளார். அம்ரிசிடம் பேசிய மர்மநபர், அம்ரிசின் வங்கி விவரங்களை பூர்த்தி செய்ய அவரது கம்ப்யூட்டரில் 'எனி டெஸ்க்' எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லியுள்ளார். அம்ரிசும் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அந்த மர்ம நபர், அந்த செயலி மூலம் அம்ரிசின் கம்யூட்டரை பயன்படுத்தியுள்ளார். மொபைலில் பேசியவாறு அம்ரிசின் வங்கி விவரங்களை வாங்கி, அவரின் கண் முன்னே, அவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.6 லட்சத்து 26 ஆயிரம் எடுத்துவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த அம்ரிஷ் இது குறித்து அம்ரிஷ் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






