search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் நடந்த கோடை விழாவில் ரூ.6.20 கோடி வசூல்
    X

    ஊட்டியில் நடந்த கோடை விழாவில் ரூ.6.20 கோடி வசூல்

    • மலர் கண்காட்சி நடக்கும் பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.100, சிறியவருக்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
    • கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு கூடுதலாக ரூ.1.20 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி ஆகியவை நடந்தது.

    தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்பட்ட கண்காட்சிகளில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வகை மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. எனவே தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்தனர்.

    ஊட்டி பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.50, சிறியவருக்கு ரூ.30 நுழைவு கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் மலர் கண்காட்சி நடக்கும் பூங்காக்களில் பெரியவருக்கு ரூ.100, சிறியவருக்கு ரூ.50 வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    அந்த வகையில் நடப்பாண்டு கோடை விழாவில் மலர் கண்காட்சி நடந்த பூங்காக்களுக்கு கடந்த 2 மாதங்களில் மட்டும் சராசரியாக 8 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். இதன்மூலம் தோட்டக்கலை துறைக்கு ரூ.6.20 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு கூடுதலாக ரூ.1.20 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து உள்ளது.

    குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடந்த பழக்கண்காட்சியை காண சுமார் 2 லட்சத்து 216 பேர் வந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 ஆயிரம் பேர் அதிகமாக சிம்ஸ் பூங்காவுக்கு வந்து உள்ளனர். பழக்கண்காட்சியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு தாசில்தார் சிவக்குமார் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×