search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தேனீக்கள் கொட்டியதில் 60 பேர் காயம்
    X

    கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தேனீக்கள் கொட்டியதில் 60 பேர் காயம்

    • திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தேனீக்கள் கூட்டம் பறந்து அங்கிருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தது.
    • பாதிக்கப்பட்டவர்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே அங்கிருந்த அரசமரத்தில் மலைத்தேனீக்கள் கூடு கட்டியிருந்தது.

    இந்த நிலையில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது தேனீக்கள் கூட்டம் பறந்து அங்கிருந்தவர்களை கொட்ட ஆரம்பித்தது. இதில் 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் திருப்பதி, சக்தி, மாரியப்பன், ராணி, மேனகா, பழனியம்மாள், தேவராஜன், சத்யா உள்பட 12 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேனீக்கள் கொட்டியவர்களும் உறவினர்களும் மருத்துவமனையில் குவிந்ததால் நேற்று அரூர் அரசு மருத்துவமனையே பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×