என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் மறியல்- 50 பேர் கைது
- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.
- வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை சிமெட்ரி சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராயபுரம்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை சிமெட்ரி சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திடீரென காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனை தடுத்த போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
Next Story






