என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உடன்குடியில் ரூ.79 லட்சத்தில் 48 பணிகள் - யூனியன் கூட்டத்தில் தீர்மானம்
  X

  உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்த காட்சி.

  உடன்குடியில் ரூ.79 லட்சத்தில் 48 பணிகள் - யூனியன் கூட்டத்தில் தீர்மானம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது
  • 11 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உட்பட 48 பணிகள் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

  உடன்குடி:

  உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் கூட்ட அரங்கத்தில் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.

  துணை சேர்மன் மீராசிரா சுதீன், ஆணையாளர்கள் ஜான்சிராணி, பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா, செல்வின், லோ போரின், செந்தில், முருகேஸ்வரி ராஜதுரை, ஜெயகமலா, ராமலெட்சுமி, மெல்சி ஷாலினி, தங்க லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் யூனியனுக்கு உட்பட்ட 11 வார்டுகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், சிமெண்ட் சாலை, சின்டெக்ஸ் தொட்டி, கால்நடை குடிநீர் தொட்டி உட்பட 48 பணிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக ரூ.79 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  பின்னர் சேர்மன் பாலசிங் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு திட்டப் பணிகள் உடன்குடி யூனியனில் தான் நடந்து வருகிறது. தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி பகுதி வளர்ச்சி திட்டப் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

  தற்போது தேர்வு செய்யப்பட்ட பணிகள் அனைத்தும் கவுன்சிலர்கள் கோரிக்கையாக கொடுத்த பணிகள்தான். இதில் அத்தியாவசிய பணிகள் மட்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளது. இனி பணிகள் தேர்வு செய்யும் போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களை அழைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்டு பணிகள் தேர்வு செய்யப்படும் என்றார்.

  Next Story
  ×