என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    407 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை- சென்னை மாநகராட்சி தகவல்
    X

    407 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை- சென்னை மாநகராட்சி தகவல்

    • கடந்த 10 நாட்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 வார்டில் மொத்தம் 551 நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளது.
    • 407 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் வார்டு வாரியாக நாய்கள் அதற்கான வாகனங்கள் மூலம் பிடித்து வரப்பட்டு கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. ஒரு வார்டில் பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அதே வார்டில் விடப்படுகிறது.

    அந்தவகையில், கடந்த 10 நாட்களில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 வார்டில் மொத்தம் 551 நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளது. இதில், 407 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக புளியந்தோப்பில் 150 நாய்களும், கண்ணம்மாப் பேட்டையில் 70 நாய்களும், மீனம்பாக்கத்தில் 57 நாய்களும் பிடிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×