என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை
    X

    கோப்பு படம்

    தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் தற்கொலை

    • தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    கம்பத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் சிவபிரகாஷ் (வயது20). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டனர். தனது சகோதரர் சிவனேஸ்வரன் (29) என்பவருடன் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக தேனி அருகே பாலார்பட்டியில் அவரது நண்பருடன் தங்கி இருந்தார்.பெற்றோர் உயிரிழந்ததால் தனக்கு ஆதரவு இல்ைல என மனமுடைந்த சிவபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடியை சேர்ந்தவர் இந்திராணி (75). கடந்த சில நாட்களாக நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மண்எண்ணையை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    இதில் உடல் முழுவதும் கருகி உயிரிழந்தார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி (37). இவருக்கு திருமண மாகாததால் விரக்தியில் மது பழக்கத்துக்கு அடிமையா னார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள செல்வம் என்பவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சாரதா (40). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×