என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா-லாட்டரி விற்ற முதியவர் உள்பட 4 பேர் கைது
- 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- 100 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் சுற்று வட்டாரப்பகுதி களில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் மற்றும் வெளி மாநில லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார்,செல்வராஜ் மற்றும் போலீசார் கரியாம் பாளையம்,வடக்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தீவிர ரோந்து ப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கிருஷ்ண கவுண்டன் புதூர், எல்லப் பாளையம்,வடக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றதாக ராஜேந்திரன் (வயது 53), பத்ரன் (72), ஈஸ்வரன்(54) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 3 பேரும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் மற்றும் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்,பில் புத்தகங்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.8890-யையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று அன்னூரை அடுத்துள்ள பொன்னேகவு ண்டன்புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது,அப்பகுதியில் பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசா ரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசார ணையில் அவர் கோவை சென்னப்பசெட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த நவீன்கு மார்(18) என்பதும், அவர் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்தனர்.