search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 4 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு
    X

    ஓசூரில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 4 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைப்பு

    • ராஜேந்திரன் நேற்று தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த 4 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பேடரப்பள்ளி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ராஜேந்திரன். இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் இவர் மேல் தளத்தில் வீடு வாடகைக்கு விட்டுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டின் முன்பு ராஜேந்திரனுக்கு சொந்தமான ஒரு இருசக்கர வாகனம், மற்றும் வாடகைக்கு குடியிருந்து வருபவர்களின் மூன்று இருசக்கர வாகனங்கள் என மொத்தம் நான்கு இருசக்கர வாகனங்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து சென்றுள்ளார்.

    இந்த தீயானது அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் பரவி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. நள்ளிரவு என்பதால் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் எரிந்து வீட்டின் முன்பக்க கதவு, ஜன்னல்கள் எரிந்து ஜன்னலில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதற துவங்கியுள்ளது.

    இந்த சத்தத்தை கேட்ட வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்து வெளியில் வராத அளவிற்கு தீ கொழுந்து விட்டு தெரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அருகில் இருந்தவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    மேலும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் அனைத்து இருசக்கர வாகனங்களும் தீயில் எரிந்து எலும்பு கூடாக கருகின.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து ஆனது முன்விரோதம் காரணத்தால் ஏற்பட்டதா? என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×