search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி கோவிலில் 8 மாதங்களாக செயல்பாட்டுக்கு வராத 3-வது மின்இழுவை  ரெயில்
    X

    பழனி கோவில் மின்இழுவை ரெயில் (கோப்பு படம்)

    பழனி கோவிலில் 8 மாதங்களாக செயல்பாட்டுக்கு வராத 3-வது மின்இழுவை ரெயில்

    • 3-வது மின்இ ழுவை ரெயில் பழுதடைந்த நிலையில் அதற்கு பதிலாக புதிய மின்இழுவை ரெயில் வாங்க முடிவு செய்ய ப்பட்டது.
    • 8 மாதமாக இன்னும் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற னர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், யானை ப்பாைத வழியாக வும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மூலமாக கோவிலுக்கு செல்கின்றனர்.

    படிப்பாதையில் 50 சதவீத பக்தர்களே செல்லும் நிலையில் வயதான முதிய வர்கள், மாற்றுத்திறனா ளிகள், குழந்தைகள் ஆகியோர் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கடந்த 30 வருடத்திற்கு முன்பாக தேவஸ்தானம் சார்பில் 3 மின்இழுவை ரெயில் வாங்கி செயல்பாட்டுக்கு வந்தது.

    இதில்3-வது மின்இ ழுவை ரெயில் பழுதடைந்த நிலையில் அதற்கு பதிலாக புதிய மின்இழுவை ரெயில் வாங்க முடிவு செய்ய ப்பட்டது. அதன்படி பழைய மின்இழுவை ரெயிலை மாற்றிவிட்டு 72 பேர் பயணம் செய்யும் வகையில் மின்இழுவை ரெயில் வடிவமைக்கப்பட்டது. இந்த ரெயிலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் ஐ.ஐ.டி குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அப்போது இந்த ரெயில் பக்தர்களை இழுத்து செல்லும் வகையில் திறனற்றதாக உள்ளது என தெரிவித்தது. முழுமையான பணிகளை செய்த பிறகு தரச்சான்று பெற்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கியது. இதனால் 3-வது மின்இழுவை ரெயில் கடந்த 8 மாதமாக இன்னும் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. ஏற்கனவே ரோப்கார் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இயக்கப்படாமல் உள்ள நிலையில் தற்போது தான் அதன்பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

    தற்போது 2 மின்இழுவை ரெயில் மட்டுமே இயக்க ப்பட்டு அதில் தலா 36 பேர் வீதம் 72 பேர் மலைக்கோவி லுக்கு சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மின்இழுவை ரெயிலில் செல்ல காத்து கிடக்கின்றனர். காலையில் ரெயில்நிலையத்திற்கு வந்தால் மதியத்திற்கு பிறகுதான் ரெயிலில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கோவி லுக்கு சென்று சாமிதரிசனம் செய்யும் பக்தர்கள் மிகுந்த சோர்வடைந்து விடுகின்ற னர்.

    மின்இழுவை ரெயில் இயக்கப்படாததால் கோவில் நிர்வாகத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கார்த்திகை, மார்கழி, தைப்பூசம் என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வர உள்ள நிலையில் பழனிகோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே அதற்கு முன்பாக மின்இழுவை ரெயிலை இயக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×