search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரமடையில்  விடுதியில் தங்கி படித்த 3 மாணவர்கள் தப்பி ஓட்டம்
    X

    காரமடையில் விடுதியில் தங்கி படித்த 3 மாணவர்கள் தப்பி ஓட்டம்

    • பெற்றோர் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • 5 தனிப் படை அமைத்து, மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    காரமடை:

    காரமடை அருகே கன்னார்பாளையத்தில் வித்யா விகாஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் என 3 பேரும், பள்ளி விடுதியின் சுவர் ஏறிக்குதித்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்க வில்லை. இது குறித்து காரமடை போலீசில், பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 5 தனிப் படை அமைத்து, மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    போலீசார் பள்ளியின்கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டனர். அப்போது கேமரா செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து, கன்னார்ப்பாளையம் ரோட்டிலும், காரமடை மெயின் ரோட்டிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மூன்று மாணவர்கள், கோவை சென்ற தனியார் பஸ்ஸில் ஏறிச்சென்றது பதிவாகி இருந்தது. இந்நிலையில் மாணவர்கள் 3 பேரும் அவரவர் வீடுகளுக்குபத்திரமாக வந்ததாக பெற்றோர் பள்ளிக்கு தகவல் அளித்தனர். விடுதியில் தங்க பிடிக்காமல் மாணவர்கள் வெளியேறி யதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் காரமடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பள்ளி,விடுதிகளில் கேமராக்கள் முழுமையான கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள சூழலில், பல பள்ளிகள் பெயரளவில் கேமராக்களை வைத்துள்ளனர். இது பெற்றோர் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×