என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை
    X

    கோப்புப்படம்.

    கூடலூரில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை

    தேனி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்ப் பளியன்குடி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகள் ரஞ்சனி (வயது 14). இவர் ஆதிவாசி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இவரை அவரது தாயார் பள்ளிக்குச் செல்லுமாறு கூறியபோது அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

    கண்டிப்புடன் தனது மகளை பள்ளியில் சென்று மாணவியின் தாய் விட்டுள்ளார். மாலையில் வீடு திரும்பிய மாணவி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கூடலூர் கன்னிகாளி புரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 53). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். குடி ப்பழக்கத்துக்கு அடிமை யானதால் இவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேதனையடைந்த தெய்வேந்திரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர் 3-வது வார்டு மூணுசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). கூலித் தொழிலாளி. இவரது மாமனார் கடந்த 10-ந் தேதி இறந்து விட்டார். அந்த இறப்புக்கு இவரது மனைவி மற்றும் மகன்கள் சொல்லா மல் சென்று விட்டனர்.

    இதனால் வேதனை யடைந்த சுதாகரன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    Next Story
    ×