search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் ஒன்றியத்தில் 2-ம் கட்டமாக  ஆதரவற்றோர், விதவை பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கல்
    X

    ஓமலூர் ஒன்றியத்தில் இலவச ஆடுகள் வழங்கும் போது எடுத்தபடம்.

    ஓமலூர் ஒன்றியத்தில் 2-ம் கட்டமாக ஆதரவற்றோர், விதவை பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கல்

    • சுய உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவச ஆடுகளை வழங்கி வருகிறது.
    • முதல் கட்டமாக கடந்த வாரம் 20 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன.

    ஓமலூர்:

    ஆதரவற்றோர், விதவை பெண்கள், ஏழைப் பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் யாரையும் நம்பி வாழாமல் தன் சுய உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவச ஆடுகளை வழங்கி வருகிறது. ஓமலூர் ஒன்றியத்தில் இந்த ஆண்டு 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்படுகிறது.

    முதல் கட்டமாக கடந்த வாரம் 20 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து 2-ம் கட்டமாக இலவச ஆடுகள் வழங்கும் விழா ஓமலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் ஓமலூர் அட்மா குழு தலைவர் செல்வ குமரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு இலவச ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    விழாவில் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவர்கள் ஆய்வு செய்து ஆரோக்கியமான ஆடுகளை வழங்கினர். தொடர்ந்து மீதமுள்ள பயனாளிகளுக்கும் ஆடுகளை வழங்க உள்ளதாக கூறினர்.

    நிகழ்ச்சியில் ஓமலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பிரகாஷ், துணைத் தலைவர் புஷ்பா, ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, தனசேகரன், கோபால்சாமி, வடக்கு ஒன்றிய அவை தலைவர் ஜெயவேல், தங்கராஜ், அருமை சுந்தரம், கருணாகரன், மோலாண்டிப்பட்டி மணி, கால்நடை மருத்துவர் மதிசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் நவநீதன், கோபி, கவிதா, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×