search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றங்களை தடுக்கும் வகையில் நாமக்கல் நகரில் 283 கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு
    X

    குற்றங்களை தடுக்கும் வகையில் நாமக்கல் நகரில் 283 கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு

    • நல்லிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புறக்காவல் நிலையத்தை ஐ.ஜி. சுதாகர் திறந்து வைத்தார்.
    • மாவட்டம் முழுவதும் 6627 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், ஆயுதப்படை மைதா–னத்திலும் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்குள்ள போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் பள்ளிபாளையத்தில் கூட்டுக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    நல்லிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புறக்காவல் நிலையத்தை ஐ.ஜி. சுதாகர் திறந்து வைத்து நிருபர்களிடம் கூறியதாவது,

    நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்கள் வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு 35 கொலை சம்ப–வங்கள் நிகழ்ந்த நிலையில் நடப்பாண்டில் 27 ஆக குறைந்து உள்ளது. மேற்கு மண்டலத்தில் தான் போக்சோ சட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    நாமக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. விபத்துகளும் குறைவாகவே உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நிருபர்களிடம் கூறுகையில், நாமக்கல் மாவட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை குறைக்கும் வகையிலும், குற்றவாளிகள் நடமாட்–டத்தை கண்கா–ணிக்கவும் நாமக்கல் நகரில் 283 கண்காணிப்பு கேமராக்கள், வாகன பதிவுகளை கண்டறியும் 6 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 6627 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×