என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடையாளர்களிடம் இருந்து 22154 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது-கலெக்டர் தகவல்
    X

    நிகழ்ச்சியில் ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    கொடையாளர்களிடம் இருந்து 22154 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது-கலெக்டர் தகவல்

    • ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தினை முன்னிட்டு ரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது :-

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தன்னார்வ ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. 2020-21ம் வருடத்திற்கான முழக்கம் ஒற்றுமையுடன் இரத்த தானம் செய்வோம், ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களை காப்போம் என்பது முன் வைக்கப்பட்டு

    ரத்ததான முகாம் மற்றும் ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 4 அரசு ரத்த மையங்கள் உள்ளன.

    4 அரசு இரத்த மையங்களில் 2021-22ம் ஆண்டில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10701 யூனிட்டும், அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் 6767 யூனிட்டும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணத்தில் 2774 யூனிட்டும் மற்றும் அரசு மருத்துவமனை பட்டுக்கோட்டையில் 1912 யூனிட் ஆக மொத்தம் 22154 யூனிட் கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அவர் 2021-22ம் ஆண்டில் அரசு இரத்த மையங்களுக்கு ரத்த தான முகாம் நடத்திகொடுத்த 69 ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பா ளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர் அருள் மேரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் வேல்முருகன், மருத்துவர்கள் வரதராஜன், ராதிகா மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×