search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் செயல்படாதவை: இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு
    X

    தமிழகத்தில் 22 அரசியல் கட்சிகள் செயல்படாதவை: இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு

    • தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன.
    • செயல்படாத கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    இந்திய தேர்தல் கமிஷன் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களை திரட்டியது. அதில், தேர்தலில் பங்கேற்காத கட்சிகள், கணக்குகளை உரிய வகையில் காட்டாத கட்சிகள் ஆகியவற்றின் பெயரை மாநில வாரியாக தேர்தல் கமிஷன் பட்டியலிட்டு வெளியிட்டது. இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 233 கட்சிகளில் செயல்பாடில்லாத பல கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    அந்த கட்சிகளுக்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் மட்டுமே விளக்கம் அளித்திருந்தன. தேர்தல் கமிஷன் அளித்த காலக்கெடு முடிந்ததைத் தொடர்ந்து, 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 23 கட்சிகள் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரியவந்தது.

    உரிய கால அவகாசத்தில் விளக்கம் அளிக்காத நிலையில், அக்கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மேலும், உரிய விளக்கம் மற்றும் கணக்குகளை அளிக்கும் பட்சத்தில் மீண்டும் பட்டியலில் அந்தக் கட்சிகளின் பெயர் இணைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் 4 கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன. அந்த விளக்கம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இவை தவிர, எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், வருமான வரி உள்ளிட்ட கணக்குகளையும் காட்டாமல், கமிஷனிடம் அளித்த முகவரியில் செயல்படாமல், தொடர்பு கடிதங்கள் திரும்பி வந்த நிலையில் உள்ள 22 கட்சிகளை செயல்படாத கட்சிகளாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அந்தக் கட்சிகளின் பெயர் பட்டியல் தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×