search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் முப்புடாதி அம்மன் கோவிலில் 207 திருவிளக்கு பூஜை
    X

    பாவூர்சத்திரத்தில் முப்புடாதி அம்மன் கோவிலில் 207 திருவிளக்கு பூஜை

    • இன்று இந்துநாடார் வாலிபர் சங்கம் சார்பில் 208 மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
    • 9-ந்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 6 மணிக்கு மாகாப்பு அலங்கா ரம், வில்லிசை நடைபெறுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத கொடை விழா நடைபெற்று வருகிறது.

    இதை முன்னிட்டு முப்புடாதி அம்மன் சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பஞ்ச எண்ணெய், பஞ்ச வண்ணதிரி , பஞ்ச மலர்கள் கொண்டு 207 திருவிளக்கு பூஜை காயத்ரி மந்திர ஜெய வேள்வியுடன் நடைபெற்றது.

    இன்று இந்துநாடார் வாலிபர் சங்கம் சார்பில் 208 மாவிளக்கு பூஜை நடை பெறுகிறது. நாளை (8-ந் தேதி) சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடைபெறு கிறது.

    இரவில் பாவூர்சத்திரம், பரதாலயா கல்சுரல் அகாடமி மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    9-ந்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 6 மணிக்கு மாகாப்பு அலங்கா ரம், வில்லிசை நடைபெறு கிறது.

    இரவு 7 மணிக்கு முப்புடாதியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பாவூர்சத்திரம் முக்கிய வீதிகளில் பூம் பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. 10-ந்தேதி கணபதி ஹோமம், துர்கா ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் மதியம் 12 மணிக்கு குற்றால தீர்த்தம் மேளதாளத்துடன் ஊர்வலம் வருதல், அபிஷேக அலங்காரம், தீபாராதனை, சந்தனகாப்பு அலங்காரம், பிரசாதம் வழங்குதல், வில்விசை 108 முளைப்பாரி ஊர்வலம், கலை நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு அர்த்தசாம பூஜை, வாணவேடிக்கை, மகா தீபாராதனை நடைபெறு கிறது.

    11-ந்தேதி எண்ணை காப்பு அலங்காரம், மஞ்சள் நீராட்டு தீர்த்தவாரி, ஊர்வலமாக சென்று கோவில் முன்பு முளைப் பாரி கரைத்தல் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து நாடார் சமுதாயத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×