என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
நீலகிரியில் 6-ந் தேதி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தல்
ஊட்டி:
பந்தலூர் அருகே நெல்லியாளம், சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு, சிங்கோனா, பாண்டியார், நடுவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தேயிலை தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிலாளர்க ளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.425 சம்பளம் வழங்க ப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுவரையும் தொழிலாளர்களுக்கு அந்த சம்பளம் வழங்கப்ப டவில்லை.
எனவே தொழிலாளர்க ளுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டபடி யான விடுப்பூதியம் மற்றும் மருத்துவ விடுப்பூதியம், பணி கொடை போன்றவை தொடர்ச்சியாக நிலுவையில் உள்ள பலன்களை உடனே வழங்க வேண்டும்.
அரசு தேயிலை தோட்டங்களில் 6 ஆயிரத்து 500 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் தற்போது 5 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 1500 காலி பணியிடங்கள் நிலுவையில் உள்ளது. அதில் தற்காலிக தொழிலாளர்களை நிரப்பி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை பறிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதியில் மீண்டும் உடனே இலை பறிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என் பது உள்பட பல்வேறு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகிற 6-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
இதேபோல் பந்தலூர் பஜாரில் தொழிலாளர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்படும் என டேன்டீ அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு எல். பி.எப்.துணை பொதுசெயலாளர் மாடசாமி. பி.டபுள்யூ. யூ.சி. பொதுசெயலாளர் சுப்பிரமணியம், சி.ஐ.டி.யூ. செய லாளர்.ரமேஸ், ஐ.என்.டி.யூ. சி. நிர்வாகி லோகநாதன். ஏ.ஐ.டி.யூ.சி. தலைவர் பெரிய சாமி ஆகியோர் தெரிவித்தனர்.
Next Story






