என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனித உரிமை ஆணைய விசாரணை நடைபெற்ற காட்சி.
நெல்லையில் மனித உரிமைகள் ஆணைய விசாரணை
நெல்லையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை நடத்தப்பட்டது.
நெல்லை:
மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை இன்று வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்குகளை விசாரித்தார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொடுத்திருந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான 41 வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் அரசு அதிகாரிகள், போலீசார் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை நடைபெற்றது. அடுத்த கட்ட விசாரணை வருகிற 29-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






