search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அறிக்கை
    X
    அறிக்கை

    திட்டங்களை பெற்று தருவேன்: செல்லூர் ராஜூ அறிக்கை

    எதிர்கட்சி எம்.எல்.ஏ. வாக இருந்தாலும் மதுரைக்கு திட்டங்களை பெற்று தருவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை

    முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக மக்கள் என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற வகை
    யில் மதுரை மேற்கு தொகுதி மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து முதன்மை தொகுதியாக உருவாகிடும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். அதில் சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

    மதுரை காளவாசல் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளன. மாடக்குளம், துவரிமான், கீழமாத்தூர் ஆகிய கண்மாய்களில் தண்ணீர் நிரம்ப வசதியாக கொடி மங்கலத்தில்வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகளையும் மேம்படுத்தி உள்ளேன்.

    மேலும் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் வசிக்கும் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் மதுரையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுகின்ற வகையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,295 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மதுரை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சே இருக்காது. மேலும் சோலை அழகுபுரம் முதல் அம்பேத்கார் நகர் வரை 973 வீடுகளுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டுமனை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. 

    மாடக்குளம் முனியாண்டி புரத்தில் உள்ள மக்களுக்கு பாதாள சாக்கடை, தார்சாலை, பேவர் பிளாக், நியாயவிலைக்கடை, அங்கன்வாடி, சத்துணவு கூடம், ஆழ்குழாய்க் கிணறுகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாடக்குளம் அய்யனார் கோயில் அருகில் சமுதாயக் கூடம் கட்டப் பட்டுள்ளது. பரவை ஊர்மெச்சிக்குளத்தில் இருந்த அரசு தொடக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சமயநல்லூரிலிருந்து துவரிமான் இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாடு மட்டுமின்றி மதுரை நகரின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடிக்கு மேல் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.சில பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகையாற்றில் நவீன சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 345 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்க வசதியாக ஏவி மேம்பாலம் அருகே தடுப்பணை கட்டப்பட்டு பனையூர் வாய்க்காலில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தெப்பகுளம் கடல் போல் காட்சியளிக்கிறது.

    வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும். தற்போது எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களை தொடர்ந்து பெற்று வருகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×