search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையிலான குழுக்கள் ஆய்வு.
    X
    குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையிலான குழுக்கள் ஆய்வு.

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையிலான குழுவினர் செனகல் நாட்டில் ஆய்வு

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையிலான குழுவினர் செனகல் நாட்டில் ஆய்வு செய்தனர்.
    தேனி:

    குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு தலைமையிலான உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செனகல் நாட்டின் தலைநகரான டாக்காரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த குழுவில் தேனி எம்.பி. ரவீந்திரநாத் இடம்பெற்று கலந்துகொண்டார்.

    ஆப்பிரிக்க கண்டத்தின் கவுரவத்தையும், சிறந்த எதிர்காலத்தை பற்றிய அதன் பார்வையை குறிக்கும் ஆப்பிரிக்க மறுமலர்ச்சியின் நினைவு சின்னத்தை பார்வையிட்டனர். பின்னர் டாக்கரில் உள்ள ஆப்பிரிக்க கலை, கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் களஞ்சியமாக உள்ள கருப்பு நாகரீகங்களின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

    இது ஆப்பிரிக்காவின் கலாச்சார மற்றும் அறிவியல் பங்களிப்புகளை முன்னிலைப் படுத்துவதின் நோக்கமாக அமைந்துள்ளதாக இந்திய குழுவினர் பாராட்டினர். தொடர்ந்து டக்கார் பைனாலே 2022 என்னும் சமகால ஆப்பிரிக்க கலை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சர்வதேச கலைக்கண்காட்சியை உயர்மட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

    இந்திய குழுவினருக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளித்து கவுரவிக்கப்பட்டனர்.
    Next Story
    ×