search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

    பிறந்தநாள் காணும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிரதமர் மோடி- தலைவர்கள் வாழ்த்து

    தமிழிசை சவுந்தரராஜனின் பொதுவாழ்வு சிறந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று 62வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    பிரதமர் மோடி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தில், தமிழிசை சவுந்தரராஜனின் பரந்த பொது வாழ்க்கை அனுபவம் அரசாங்கத்தின் சொத்து என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு நீண்ட ஆயுளைத் தந்து, தேச சேவையில் எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக மோடி கூறி உள்ளார்.

    பிரதமர் மோடியுடன் தமிழிசை சவுந்தரராஜன்

    வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு, ஆளுநர் தமிழிசை நன்றி  தெரிவித்துள்ளார். ‘உங்கள் வாழ்த்து செய்தியானது, வளமான எதிர்கால இந்தியாவுக்காக உங்கள் தொலைநோக்கு நடவடிக்கைகளில் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணிப்பதற்கு என்னை ஊக்குவிக்கிறது. தேசத்திற்கான உங்களின் 24 மணி நேர சேவை எனக்கு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கிறது’ என தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் மாண்புமிகு ஆளுநரும், எப்போதும் என் அன்புக்குரிய தங்கையுமான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.

    மு.க.ஸ்டாலினுடன் தமிழிசை சவுந்தரராஜன்

    வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

    “தெலுங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நமது தேசத்தின் சேவையில் அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்தி உள்ளார்.

    ‘இன்று பிறந்தநாள் காணும் தெலுங்கானா ஆளுநர் மற்றும் @LGov_Puducherry,அன்பு சகோதரி திருமதி. @DrTamilisaiGuv அவர்கள் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் அனைத்து வளங்களும் பெற்று மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருளால் வாழ்வில் வெற்றிகள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!’ என மத்திய மந்திரி எல்.முருகன் கூறி உள்ளார்.

    ‘இன்று பிறந்தநாள் காணும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மேதகு ஆளுநர் திருமதி. டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியுடன் தமிழிசை சவுந்தரராஜன்

    ‘மேதகு தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் பாண்டிச்சேரி ஆளுநர்(கூடுதல் பொறுப்பு) டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், அன்பு சகோதரி மேதகு @DrTamilisaiGuv அவர்களின் பொதுவாழ்வு சிறந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார். 

    தமிழிசை சவுந்தரராஜன், டாக்டர் சி.விஜயபாஸ்கர்

    ‘பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான மாண்புமிகு @DrTamilisaiGuv அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உயரங்கள் பல சென்றாலும், உள்ளம் நிறைந்த அன்பால்; ஆளுமையால் எப்போதும் ‘அன்பை விதைக்கும் அக்கா’ நலம் சூழ வாழ்க!’ என தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் வாழ்த்தி உள்ளார்.
    Next Story
    ×