search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    தமிழகத்தில் ரூ.450 கோடி பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்தி டீலர்கள் போராட்டம்

    மத்திய அரசை கண்டித்து பெட்ரோல் நிலைய விற்பனையாளர்கள் இன்று ஒரு நாள் கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5800 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை தினமும் எண்ணை நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் நிர்வாக செலவு அதிகரித்து நஷ்டம் ஏற்படுவதால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொள்முதல் நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    தமிழகத்தில் ஒரு நாள் கொள்முதலை நிறுத்தியதால் மத்திய அரசுக்கு ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-

    2017 முதல் டீலர்களுக்கான விற்பனை விளிம்பு தொகை கொடுக்கப்படவில்லை. விலை உயர்வால் நிர்வாக செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. கலால் வரி குறைத்து இருப்பது நல்லதுதான் அதனை வரவேற்கிறோம். கலால் வரி குறைப்பை முறையாக அமல்படுத்தாதால் ஒவ்வொரு டீலருக்கும் ரூ.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    சேமிப்பில் இருந்த பெட்ரோல், டீசல் இருப்பினால் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 21-ந் தேதி வரை தமிழகத்தில் ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதேபோல தீபாவளி பண்டிகையின் போது கலால் வரி குறைக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் முதலீடு குறைந்து தொழிலை நடத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    எண்ணை நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் இன்று ஒரு நாள் கொள்முதல் செய்யாமல் நிறுத்தப்பட்டுள்ளது. ரூ.450 கோடி மதிப்புள்ள பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதன் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்க கூடிய கலால் வரி ரூ.100 கோடி, மதிப்புகூட்டு வரி (வாட்) ரூ.100 கோடி இழப்பு ஏற்படும்.

    கொள்முதல் நிறுத்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விற்பனை பாதிக்காது. தங்கு தடையின்றி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×