என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
எடப்பாடி, மேட்டூரில் கனமழை
எடப்பாடி, மேட்டூரில் கனமழை பெய்து வருகிறது.
சேலம் :
சேலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக எடப்பாடி, மேட்டூரில் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எடப்பாடியில் அதிகபட்சமாக 13 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மேட்டூரில் 8.6,கெங்கவல்லி 7.6 ஆத்தூர் 4.6 சங்ககிரியில் 3 மில்லி மீட்டர் என மழை பதிவாகி உள்ளது. இன்று காலை முதல் மதியம் வரை சேலத்தில் வெயில் வெளுத்து வாங்கியபடி இருந்தது.
Next Story






