search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீக்குளிக்க முயன்ற பிரேமலதாவிடம் துணைமேயர் நாகராஜன் விசாரித்த போது எடுத்த படம்.
    X
    தீக்குளிக்க முயன்ற பிரேமலதாவிடம் துணைமேயர் நாகராஜன் விசாரித்த போது எடுத்த படம்.

    துணை மேயர் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

    திருப்பரங்குன்றத்தில் குறைதீர் முகாமில் துணை மேயர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.
    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவ லகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது.

    மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜன், மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 20-வார்டு பகுதிகளைச் சேர்ந்த அவனியாபுரம், ஹார்விபட்டி, திருநகர், வில்லாபுரம், மீனாட்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் மனுக்கள் அளி த்தனர். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உசிலை சிவா, சிவசக்தி ரமேஷ், இந்திரா காந்தி, கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியைத் தொடர்ந்து துணைமேயர் வெளியே புறப்பட முயன்ற போது திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மனைவி பிரேமலதா என்பவர் கையில் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார் . உடனடியாக அருகிலிருந்த போலீசார் அந்த பெண்ணிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து அவரை காப்பாற்றினர். 

    இதுகுறித்து துணைமேயர் நாகராஜன் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது, அவர் கடந்த 40 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் கோயில் வாசலில் பூ கடை வைத்திரு ப்பதாகவும், தற்போது அந்த கோயில் நிர்வாகம் தனது கடையை காலி செய்த தாகவும் இதனால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.  

    உடனடியாக சம்பந்த ப்பட்ட அதிகாரிகளை அழைத்த துணைமேயர் நாகராஜன் சம்பந்தப்பட்ட வெயிலுகந்த அம்மன் கோவில் நிர்வாகத்திற்கும், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகத்துக்கும் இடையே நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. 

    எனவே வழக்கு முடியும் வரை இந்த பெண்மணி அந்த பகுதியில் கடை வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அந்தப் பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

    மாநகராட்சியின் மேற்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டத்தில் திடீரென பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×