search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது- நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை

    தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென் தமிழகம் மற்றும் உட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பரவி உள்ளது.

    இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    மீனவர்கள் தென் கிழக்கு அரப்பிக்கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பலத்த காற்று மேற்கண்ட பகுதியில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 10 செ.மீ., தேவலா 8 செ.மீ., புள்ளம்பாடி (திருச்சி) 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×