என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை
    X
    மதுரை

    குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம்

    குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டத்தின் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆகியோரின் அறிவுரைகளின்படி பேரூராட்சிகளில் பிரதி மாதம் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப்பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    அதன்படி மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் உள்ள வார்டு எண் 6 மற்றும் 7 ஆகிய பகுதிகளில் ஒட்டுமொத்த தீவிர துப்புரவு முகாம் நடத்தப்பட்டது. 

    செயல் அலுவலர் தேவி மேற்பார்வையில் பேரூராட்சி தலைவர் சுமதி பாண்டியன், துணை தலைவர் ராமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர்களுடன் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

    மேலும் குப்பைகளை தரம்பிரித்து வழங்கிய வார்டு எண் 6 மற்றும் 7 நாடார் தெருவை சேர்ந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவரால் பரிசு வழங்கப்பட்டது. மேலும், வீடுகள் தோறும் ஈரக்கழிவு, உலர்க்கழிவு, மின் கழிவு மற்றும் அபாயகரமான கழிவுகள் என பல்வேறு கழிவுகளை பிரித்து வழங்குதல் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
    Next Story
    ×