என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
என்ஜினீயர் மீது தாக்குதல்
முதலியார்பேட்டையில் கழிவுநீர் வாய்க்கால் தகராறில் பொதுப்பணித்துறை என்ஜினீயரை தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்யார்பேட்டை இந்திராநகர் அண்ணாவீதியை சேர்ந்தவர் ராஜகிருஷ்ணன் (வயது57). இவர் புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டுக்கு 2 தெருவிலும் வாசல் உள்ளது.
இந்த நிலையில் ராஜகிருஷ்ணன் வீட்டு பின்வாசல் கழிவுநீர் வாய்க்காலில் நாகராஜன் என்பவரது வீட்டு கழிவுநீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதுபற்றி ராஜகிருஷ்ணன் கேட்ட போது நீ யார் இதுபற்றி கேட்பது என்று நாகராஜ் கூறி தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அப்போது அவருடன் இருந்த அவரது மகன் சங்கர் (26) என்பவர் என் அப்பாவிடம் வாக்குவாதம் செய்கிறாயா? என திட்டி ராஜகிருஷ்ணனை கன்னத்தில் தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜகிருஷ்ணன் மயங்கி சாய்ந்தார்.
உடனே அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ராஜகிருஷ்ணனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ராஜகிருஷ்ணன் பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






