என் மலர்
உள்ளூர் செய்திகள்

உதவித் தொகைக்கான காசோலையை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் வழங்கிய காட்சி.
தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது
நெல்லை:
தென்காசி தாலுகா குறும்பலாபேரி உலகாசிபுரம் தெருவை சேர்ந்தவர் சேர்மன். தேங்காய் பறிக்கும் தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் தேங்காய் பறிக்க சென்றபோது தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
எனவே வறுமையில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்க நலிந்தோர் நல நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கு நிர்வாக சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று நடைபெற்ற நெல்லை தட்சணமாற நாடார் சங்க நிர்வாக சபை கூட்டத்தில் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் டி.ராஜகுமார் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலையில் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை சேர்மனின் மனைவி சுந்தரவள்ளியிடம் வழங்கினார்கள்.
இதில் காரிய கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story