search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை

    தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் அந்த பகுதியில பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கோடை மழை குறைந்து வெயில் அடித்துவந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. பாபநாசத்தில் 1 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 615.16 கனஅடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83.40 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.40 அடியாகவும் உள்ளது.

    அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து வருகின்றனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் சென்று வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. நேற்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் அந்த பகுதியில பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசியில் 1.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. குண்டாறு, அடவிநயினார் அணை பகுதியில் தலா 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×