search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வாறுகாலில் இறங்கி சாக்கடையை அப்புறப்படுத்திய பொதுமக்கள்.
    X
    வாறுகாலில் இறங்கி சாக்கடையை அப்புறப்படுத்திய பொதுமக்கள்.

    பாளையில் சாக்கடையை தூர்வார களமிறங்கிய பொதுமக்கள்

    பாளையில் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியை பொதுமக்களே செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட பாளை மனக்காவலம் பிள்ளை நகர் பகுதியில் உள்ள திருமலை தெரு, சண்முகம் பிள்ளை தெரு, காமராஜ் நகர் உள்பட ஏராளமான தெருக்களில் கடந்த சில நாட்களாக குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப் படவில்லை.

    மேலும் சாக்கடை வாறுகால் முறையாக தூர்வாரப்படவில்லை என்றும், இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று 7-வது வார்டு கவுன்சிலர் இந்திரா தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் சாக்கடை அள்ளும் பணியை தாமதப்படுத்துவதாக கூறி கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் வாறுகாலில் இறங்கி சாக்கடைகளை அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே முறையாக குப்பைகள் அப்புறப் படுத்தப்படவில்லை. சாக்கடை களை அள்ளு வதற்கு பணியாளர்கள் வருவதில்லை.
     இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளோம். இதன் காரணமாக நாங்கள் இன்று சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு ள்ளோம் என்றனர்.

    தகவலறிந்த பாளை போலீசார் மற்றும் பாளை மண்டல சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    உடனடியாக தூய்மைப் பணியாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு குப்பை களை அப்புறப்படுத்தும் பணி மற்றும் சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணியை தொடங்கினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×