search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பைகள் தரம் பிரிக்க பயிற்சி
    X
    குப்பைகள் தரம் பிரிக்க பயிற்சி

    சோழவந்தான் பேரூராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்க பயிற்சி

    சோழவந்தான் பேரூராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மையான, சுகாதாரமான பேரூராட்சியாக திகழ பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் குறித்து, வர்த்தகர்கள் சங்கம், குடியிருப்போர்கள் நலச்சங்கம் மற்றும் உணவகங்கள் நடத்துபவர்களுக்கும் பேரூ ராட்சி தலைவர்ஜெயராமன் தலைமையில், செயல் அலுவலர் சுதர்சன் முன்னிலையில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

    இதில் பொதுமக்கள் பயன்படுத்தி கழிக்கும் குப்பைகளை அறிந்து தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கும் பயிற்சி  அளிக்கப்பட்டது. 

    காதார ஆய்வாளர் முருகானந்தம்  பேசுகையில், பேரூராட்சி பகுதிகளில் உள்ள தெருக்கள், கடைவீதிகளில் நாள் தோறும் காலை, மாலை பொதுமக்கள் சேகரித்து தரும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனித்தனியே தரும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பரிசு பொருட்கள் உள்ளாட்சி உறுப்பினர்கள் பங்களிப்புடன் வழங்கப்படும் என்றார். 

    குப்பைகள் எப்படி தரம் பிரிப்பது? என பயிற்சியுடன் விழிப்புணர்வில் காணொளி காட்சி மூலம் காட்டப்பட்டது, பேரூராட்சி தலைவர் ஜெயராமன் கூறுகையில், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து தரும் பெண்களுக்கு உறுப்பினர்கள் சார்பில் பரிசு பொருட்கள் வழங்க வழங்கப்படும் இந்த திட்டம் நாளை முதல் வீடுகள் தேடி மக்களை உற்சாக படுத்தப்படும் என்றார்.

    துணைத்தலைவர் லதா கண்ணன், உறுப்பினர்கள் குருசாமி, சிவா, முத்துலட்சுமி, வர்த்தக சங்க தலைவர் ஜவஹர், பாண்டியன், உணவக உரிமையாளர்கள் விஜயகுமார், மணிகண்டன், குடியிருப்போர்கள் நல சங்கம் சார்பில் தங்கராஜ், கிரிராஜன், செல்வம், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் கண்ணம்மா நன்றி கூறினார்.
    Next Story
    ×