என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாயம்
  X
  மாயம்

  குழந்தையுடன் இளம்பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் குழந்தையுடன் இளம்பெண் மாயமானார்.
  மதுரை

  மதுரை காளவாசல் பல்லவன் நகரைச் சேர்ந்தவர் கவுதமன் (வயது 29). இவர் பழங்காநத்தத்தில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி (24). இவர்களுக்கு ஆராதனா என்ற ஒன்றரை வயது மகள் உள்ளார். சம்பவத்தன்று குழந்தையுடன் சுமதி கோவைக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் மதுரையில் உள்ள வீட்டுக்கு வந்து துணிமணிகளை எடுத்துச் சென்றார். 

  அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை பார்த்தபோது சுமதி, குழந்தையுடன் ஒரு நபருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது ெதரிந்தது. இதுகுறித்து கணவர் கவுதமன் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமதியையும், குழந்தையையும் தேடி  வருகிறார்கள். 

  மதுரை பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு, யுனிவர்செல் தெருவைச் ேசர்ந்தவர் முத்துவேல் (வயது 27). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. 45 நாட்களுக்கு முன்பு இவர் ஆதார் கார்டை வாங்கிச் சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. 

  மகன் வெளியூர் வேலைக்கு சென்றிருப்பார் என்று கருதிய முத்துவேலின் தந்தை தேடாமல் இருந்து விட்டார். இதுகுறித்து தந்தை மாரி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×