search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தென்னங்கன்றுகள் வழங்குவது தேவையற்றது - கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி

    நீர்ப்பாசன ஆதாரங்களை பெருக்காமல், பாசன பரப்பு 3 லட்சம் ஏக்கரில் இருந்து 4 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் மேம்படுத்தி பி.ஏ.பி.,யை நம்பி தென்னை சாகுபடி செய்துள்ளனர்.
    திருப்பூர்:
    அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமங்களில் ஒரு பண்ணை குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்குகிறது.ஏற்கனவே பல லட்சம் தென்னை மரங்களை விவசாயிகள் நட்டு வைத்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., யை நம்பியே விவசாயிகள் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.

    நீர்ப்பாசன ஆதாரங்களை பெருக்காமல், பாசன பரப்பு 3 லட்சம் ஏக்கரில் இருந்து 4 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டது.ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னை சாகுபடிசெய்த விவசாயிகள் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஒருவருக்கு 3 தென்னங்கன்றுகள் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில்,  மேய்ச்சல் நிலமாக இருந்ததை விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் மேம்படுத்தி பி.ஏ.பி.,யை நம்பி தென்னை சாகுபடி செய்துள்ளனர்.அரசின் குளறுபடிகளால் பாசன திட்டம் நாசமாகியுள்ளது. தென்னை காய்ந்ததால் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒரு தலைமுறை உரிமை பறிபோய் விட்டது. நீராதாரங்களை பெருக்காமல் தென்னங்கன்று வழங்குவது புரிதல் இல்லாத அரசு என்பதையே இது காட்டுகிறது.

    மொத்தமாக கொள்முதல் செய்தால், 50 ரூபாய்க்கு கிடைக்கும். ஒரு கன்று 150 ரூபாய் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு தோப்புகளிலும் நூற்றுக்கணக்கான காய்கள் முளைத்து கிடக்கின்றன.இருக்கின்ற மரங்களை காப்பாற்ற வழி இல்லாத நிலையில் இது தேவை இல்லாதது என்றார்.
    Next Story
    ×