என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்
இந்தாண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.
திருப்பூர்:
ஆண்டு தோறும் சுதந்திர தின விழாவின் போது, வீரம் மற்றும் சாகச செயல்களை செய்த துணிச்சல் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 'கல்பனா சாவ்லா' விருது, பதக்கம் மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன.
பெயர், முகவரியுடன், தங்களின் விரிவான சாதனைப்பட்டியல், அதற்குரிய ஆவணங்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பொதுத்துறை முதன்மை செயலருக்கு, ஜூன், 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விருதுக்கு தகுதியுள்ளவர்களை, அரசு நியமித்துள்ள குழு ஆய்வு செய்யும். அவர்களால் பரிந்துரைப்பவருக்கு விருது வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story






