search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலை அம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    மாலை அம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    கோவில்பட்டி மாலை அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

    கோவில்பட்டியில் மாலை அம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத ஸ்ரீ மாலையம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. 


    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படி தாரர்கள் சார்பில் வணிக வைசிய நடுநிலைப்பள்ளி கண்ணகி கலையரங்கத்தில் வைத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

     இதே போல் தினமும் இரவு 7 மணிக்கு முளைப்பாரி வைத்து கும்மியடித்து, குலவையிட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது. 

    22-ந் தேதி காப்புகட்டி, அக்னிகுண்டம் வளர்த்து நகர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று கோவில்பட்டி வணிக வைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தனுஷ்கோடிய புரம்தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் நகர்வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கோவில் முன்பு பொங்கல் விழா, மாவிளக்கு மற்றும் முளைப்பாரி நகர்வலம் வந்து தொடர்ந்து சுவாமி அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இரவு 11 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது.

    26-ந் தேதி (வியாழக் கிழமை) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற உள்ளது. 

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், துணைத் தலைவர் பரமசிவம், துணைச் செயலாளர் மணிமாறன், இணைச்செயலாளர் காளிதாஸ், கவுரவ ஆலோசகர் மாதவராஜ், 

    மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், சங்கர் குமார், கல்யாணசுந்தரம், சின்னத்துரை, கண்ணன், ஆறுமுகம், பழனிகுமார், செண்பகராஜ், கார்த்திக், முனிய செல்வம், மாரிக்கண்ணன், சின்னத்தம்பி, தங்கராஜ், மாரிக்கண்ணன், சுரேஷ், வெங்கடேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×