என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி

    நெல்லையில் ஷிபா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில், உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வண்ணார்பேட்டை வடக்கு புற வழிச்சாலையில் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

     சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் கலந்து கொண்டு மனித சங்கிலியை தொடங்கி வைத்தார். துணை மேயர் கே.ஆர்.ராஜு முன்னிலை வகித்தார். மருத்துவமனையின் தைராய்டு நோயியல் சிறப்பு மருத்துவர் அருண் விஸ்வநாத் தைராய்டு தின சிறப்பு செய்தி வழங்கினார்.


    மனித சங்கிலியில் ஷிபா மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஐகிரவுண்ட் அப்துல் ரஹ்மான் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஷிபா மருத்துவமனையின்  அவசர சிகிச்சை மருத்துவர் ஷியாவுல்லா, டவுன் அருண் நர்சிங் ஹோம் சுந்தரலிங்கம் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஷிபா மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×