என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுவன் அர்ஜூன்
மின்னல் தாக்கி பலியான சிறுவன்
மாட்டை அழைத்து சென்ற சிறுவன் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்
அழகர் கோவில் கோட்டைவாசல் பகுதியை சேர்ந்த அம்மாசி. வேன் டிரைவர். இவரது மனைவி சுனிதா.
இந்த தம்பதியினருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் மழை பெய்தது. இதனால் மாட்டை பிடித்து கட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அம்மாசி, மனைவி சுனிதா, மகன் அர்ஜூன் (6) ஆகியோர் சென்றனர்.
அப்போது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அம்மாசியும், சுனிதாவும் காயமின்றி தப்பினர். சிறுவன் அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
Next Story






