என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிவாரணம்
குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.90.50 லட்சம் நிவாரணம்
குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.90.50 லட்சம் நிவாரணமாக சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் கதிரவன் தெரிவித்துள்ளார்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணை யக்குழு அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான கதிர வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2021 -22ம் ஆண்டுகளில் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகை அளிக்க சட்டப்ப ணிகள் ஆணைக்குழு சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 32 வழக்குகளில் பாதிக்கப்பட்ட வா்கள் தற்போது தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான நிவாரண நிதியாக மொத்தம் ரூ.90.50 லட்சம் பெறப்பட்டுள்ளது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா ஆலோசனைப்படி மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன் நிவாரண உதவி அந்தந்த போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்க ப்படும்.
பெரிய குற்றச்சம்ப வங்களில் பாதிக்கப்பட்டோருடைய குடும்பத்தினா், விபத்துகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவா்களின் குடும்பத்தினா், குடும்பப் பிரச்னையில் தாய் கொல்லப்பட்ட நிலையில், தந்தையும் சிறைக்கு சென்ற நிலையில் தவிக்கும் குழந்தைகள் என பலதரப்பட்டவா்களுக்கும் நிவாரணம் அளிக்க ப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 38 மனுக்கள் நிவாரணம் கோரி சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு வந்துள்ளன. அதில் தற்போது வரை 32 மனுக்க ளுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு ள்ளது.
ஆகவே பொது மக்கள் ஏதேனும் குற்றச்சம்ப வங்களில் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடினால் நிவாரணம் கோரி சட்டப்ப ணிகள் ஆணைய குழுவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story