search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத், காதர்பாட்சா முத்துராமலிங்கம்
    X
    தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களை கலெக்டர் சங்கர்லால் குமாவத், காதர்பாட்சா முத்துராமலிங்கம்

    ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொடக்கம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில், 61 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொடக்கப்பட்டது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குண்டு கிராமம், கமுதியில் முஷ்டக்குறிச்சி ஊராட்சி உள்பட 61 ஊராட்சிகளின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட தொடக்க விழா நடந்தது. 

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்தந்த ஊராட்சிகளில் உள்ளாட்சித் தலைவா்கள், அதிகாரிகள் மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    வண்ணாங்குண்டுவில் நடந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதா்பாட்சா முத்துராமலிங்கம், கலெக்டர் சங்கா்லால் குமாவத், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமாா், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் டாம்பி. சைலஸ் ஆகியோர் கலந்து கொண்டனா்.

    நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு உரங்கள், வேளாண் முனைவோருக்கான மானியக் கடனுதவிக்கான காசோலைகள், ஆழ்துளை மற்றும் திறந்தவெளிகிணறு அமைப்பதற்கான உத்தரவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. 

    கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜேந்திரபிரசாத், வேளாண்மைத் துறை துணை இயக்குநா் ஷேக்அப்துல்லா, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
    Next Story
    ×